Month: January 2023

மண்ணரிப்பு ஏற்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

தர்மபுரி ஜன, 9 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாறு அணையை ஒட்டி செல்லும் தொப்பூர்- பொம்மிடி சாலை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சாலையை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

தரிசன கட்டணம். பிரசாதம் விலை உயர்வு.

திருப்பதி ஜன, 9 திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்புமின்றி இன்று முதல் விலை உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லட்டு பிரசாதம்…

குளிரின் தாக்கம் ஜார்கண்டில் 14ம் தேதி வரை விடுமுறை.

ஜார்க்கண்ட் ஜன, 9 ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசுவதால் மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 14ம் தேதி வரை கூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு…

காயத்ரிக்கு சிறந்த நடிகை விருது.

ஜெய்ப்பூர் ஜன, 9 மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை காயத்ரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வங்கதேச இயக்குனர் அபர்னாசென் பெற்றார். சிறந்த நடிகைக்கான…

₹440 கோடி பிரம்மாண்ட வசூல் சாதனை.

சென்னை ஜன, 9 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தொடர்ந்து பெரும் வசூல் சாதனையை படைத்து வரும் இப்படம் இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படங்களும் செய்யாத…

ஊராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

கடலூர் ஜன, 9 கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பணியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஊராட்சிகள் உதவி இயக்குனர்…

பொங்கல் தொகுப்பில் கரும்புகள் அனுப்பும் பணி தீவிரம்.

கோயம்புத்தூர் ஜன, 9 கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 3 ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன்…

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.

செங்கல்பட்டு ஜன, 9 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல்…

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம்.

அரியலூர் ஜன, 9 ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை, அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னை…

துபாயில் கோல்டன்விசா பெற்ற டிவி புகழ் தொகுப்பாளினி DD.

துபாய் ஜன, 8 ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய பிரமுகர்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகதை சேர்ந்த நடிகையும் மற்றும் டிவி தொகுப்பாளியான DD என்ற அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அமீரகத்தின்கோல்டன்…