கோயம்புத்தூர் ஜன, 9
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 3 ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும், கரும்புகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாளை முதல் பொங்கல் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என்றனர்.