துபாய் டிச, 22
ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரீன் குளோப் சமூக அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவி முனைவர் சமூக சேவகி ஜாஸ்மின் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அமீரகம் ஏற்பாட்டில் திட்வா புயல்க்கான (Cyclone Ditwah) நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. நவம்பர் இறுதியில் திட்வா புயல் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வுதவியை ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில் கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) அமீரகத்தின் துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக நிர்வாகிகள் முன்பு ஒப்படைக்கப்பட்டது . இந்நிகழ்வில் அமீரகத்திற்கான இலங்கை தூதரக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எங்களுடன் சிறந்த பங்களிப்பை வழங்கியTEPA (அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு)
அமீரக நண்பர்கள் குழு, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் நிருபரும் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா பச்சை மண்ணு பாசறை, தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைப்பின் தலைவி முனைவர் ஜாஸ்மின் அபூபக்கர் கூறினார். நிர்வாக குழுவினர் ரசூல் மைதீன், சிந்தா, தாகிர், அப்துல் ரகுமான், பீர் முஹம்மது, சாபீர், கஸ்தூரி, நுஸ்ரா பானு, அருணா ஆகியோர் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.
.
