கீழக்கரை நவ,19
கீழக்கரை கோகா அகமது தெருவில் அஸ்வான் கீழ் இயங்கிவரும் மதரஸத் அல்மனார் சிறார் பள்ளியின் 13ம் ஆண்டு விழா நடைபெற்றது.
மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுதீன் ஆலிம்,புதுப்பள்ளி கத்தீப் மௌலானா மன்சூர் ஆலிம்,சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஆசிப்ஹுசைன் வாழ்த்துரை வழங்கினர்.
SDPI கட்சி மாநில துணை தலைவர் அப்துல்ஹமீது அல்மஸ்ஜிதுர்ரய்யான் ஏசி பஜார் பள்ளி கத்தீப் மௌலானா ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மாணவர்களின் பல்வேறு சமூக சிந்தனை கொண்ட கலாச்சார நிகழ்சிகள் நடைபெற்றன.மாணவர்கள்,பெற்றோர்களுக்கு மதிப்புமிகு பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை அஸ்வான் பொறுப்பாளர் கஃபார்கான் மற்றும் நிர்வாகிகளும் பள்ளி உஸ்தாதுமார்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்;
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
