துபாய் டிச, 19
ஐக்கிய அரபு அமீரக ராஸ் அல் கைமாவில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அமீரக தமிழ் சங்கம் அமைப்பின் தலைவி Dr ஷீலு தலைமையில் ராஸ் அல் கைமாவில் உள்ள ராக் மாலில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராக் மால் மேலாண்மை நிர்வாகி மன்சூர், ராக் அமீரக தமிழ்ச்சங்க நிர்வாகிகள், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், மார்வலஸ் டென்டல் கிளினிக் இயக்குனர் டாக்டர் ஜெமீல் ராஜா, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா ஆகியோர் உள்ளிட்ட 500 மேற்பட்ட பார்வையாளர்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமீரக சங்க நிர்வாகிகள் யேசுபிரானின் பிறப்பை தத்ரூபமாக காட்சிகளாக நடித்துக்காட்டியது அனைவரின் பாராட்டினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இநீநிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலு நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.
