Category: மாவட்ட செய்திகள்

கடலரிப்பை திமுக அரசால் தடுக்க முடியாதா? சீமான் கேள்வி.

கன்னியாகுமரி ஜூலை, 28 கடலுக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் திமுக அரசால் கடலரிப்பை தடுக்க முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி அருகே புத்தன்துறையில் 13 வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், மாவட்ட நிர்வாகமும் திமுக அரசும்…

மதுரையில் சமுதாயக் கூடத்தை வாடகைக்கு விட்டு 10 ஆண்டாக வருமான ஈட்டிய முன்னாள் கவுன்சிலர்.

மதுரை ஜூலை, 27 கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா, சமுதாயக்கூடத்தை அதிரடியாக மீட்டு மாநகராட்சி…

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க மானியம்.

ராமநாதபுரம் ஜூலை, 27 ராமநாதபுரம் அமேசான், பிளிப்கார்ட், ZOMATO, MEESHO போன்ற இணைய நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்தார். நலவாரியத்தில் பதிவு செய்த டெலிவரி…

Dr.நம்பெருமாள்சாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி.

மதுரை ஜூலை, 25 உடல்நலக்குறைவால் மறைந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் Ex தலைவர் Dr.நம்பெருமாள்சாமி உடலுக்கு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மதுரை…

பல லட்சம் பேருக்கு விழி கொடுத்த நாயகன் மறைவு.

மதுரை ஜூலை, 24 ‘அரவிந்த் கண் ஆஸ்பத்திரி வண்டி வந்திருச்சி’ என்ற வார்த்தை இன்றும் கிராமங்களின் திண்ணையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. செக்-அப் முதல் ஆபரேஷன் வரை பல லட்சம் பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இந்த குழுமத்தின்…

மதுரை ஆதீனம் மீது அடக்குமுறை வானதி விமர்சனம்.

மதுரை ஜூலை, 24 மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், பாக்கிஸ்தானிற்கு தொடர்பிருப்பதாகவும் மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிரான வழக்கில் அவருக்கு முன்ஜாமினும் அளிக்கப்பட்டுள்ளது.…

வார விடுமுறை… அரசு ஸ்பெஷல் பேருந்துகள் அறிவிப்பு.

சென்னை ஜூலை, 23 வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜூலை 25, 26, 27-ல் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி ஜூலை, 23 உள்ளூர் விடுமுறை அளித்தாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 24) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) வேலைநாள் என…

போக்குவரத்து நெருக்கடியை வேடிக்கை பார்க்கும் கீழக்கரை நகராட்சி!

கீழக்கரை ஜூலை, 22 கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் தலைதூக்கியுள்ளதை சுட்டிக்காட்டி சமூக நல ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கு நகராட்சி வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும் நீதிமன்றத்தில் பதிலளித்தார்.இதனை…

கீழக்கரை மக்களே உஷார்…வீடு வீடாக OTP நம்பர் கேட்கும் திமுகவினர்!

கீழக்கரை ஜூலை, 20 ஒரே அணியில் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் வேலையை அந்தந்த பகுதி திமுகவினர் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவினர்…