தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த ஊர் முழுவதும் மின் தடை செய்து மரக்கிளைகளை வெட்டி சுத்தம் செய்வது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் இதுபோன்று ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்து ஒரு நாள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின் தடையை மக்கள் எதிர்க்கவில்லை.ஆனால் அந்த மின் தடையை சனிக்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டுமென்பதே பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர் மாணவர்களின் கோரிக்கையாகும்.
கீழக்கரையில் இன்று (29.10.2025) புதன்கிழமை காலை முதல் மாலை வரை மின் தடை செய்துள்ளனர்.இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதியின்றி ஆசிரியர்களும் மாணவர்களும் வியர்வையில் குளித்து அவதியுறுகின்றனர்.
சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அந்த நாளில் மின் தடை செய்து மின்வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் மாணவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை சனிக்கிழமைகளில் மேற்கொள்ள கீழக்கரை மின்வாரியம் முன்வர வேண்டுமென்பதே ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
