பரமக்குடி நவ, 5
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்த தாரராக (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) இருந்து வருகிறார். இவர் இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி ஏரியாவில் தார் ரோடு போடுவதற்கு பணி ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
மேற்படி வேலையை முடித்து அதற்குண்டான தொகையை விடுவிக்க வேண்டி கடந்த 24.10.2025 ஆம் தேதி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு Senior Drafting Officer வீரசேகரன் அவர்களை நேரில் சந்தித்து புகார்தாரர் பார்த்த வேலைக்கான தொகையை விடுவிக்க கேட்ட போது, மேற்படி தொகையை விடுவிக்க SDO வீரசேகரன் கமிஷனாக ரூ1,20,000/- கேட்டும், அதை JrD.O நாகலிங்கத்திடம் கொடுக்குமாறு கறாராக கூறியுள்ளார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
காவல் துறையில் புகார் செய்தார்:
லஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.1,20,000/-ஐ SDO வீரசேகரன்(55), JDO நாகலிங்கம்(55), மற்றும் உதவியாளர் அருண்(41) அவர்களிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.(04.11.25). மேற்படி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள:. DSP-9498215697;9498652169, INS1-9498188390, INS2-9600082798
குறிப்பு: இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்
