கீழக்கரை அக், 20
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் கடந்த 2 நாட்களாக (18,19/10/2025) வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெற்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்