கீழக்கரை அக், 19
கடந்த 09.10.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து ஜமாத் இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான கூட்டம் தனியார் செங்கல் விற்பனை கூடத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கான பிளாஸ்டிக் சேர்களை நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி இறக்கியதும் அதற்காக நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதும் பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
இதற்கு கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு மற்றும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு,தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு தப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஒட்டு மொத்த பொதுமக்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.