ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்றும்(15.10.2025)இன்றும்(16.10.2025)பெய்த மழையால் ஊரின் முக்கிய இடங்களிலெல்லாம் மழை நீர் ஓட வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.
அக்டோபர் நவம்பர் மழை காலம் என்பதை அறிந்து நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாறுகால்களை தூர் வாரி சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
இரண்டு நாள் மழைக்கே கீழக்கரை குளமாகி விட்டதால் இனி அடுத்து பெய்யும் மழைக்கு என்ன நடக்குமோ?என்ற பீதியில் மக்கள் அச்சத்துடன் தேங்கி கிடக்கும் குளங்கள் வழியாக கடந்து செல்கின்றனர்.
ஆங்காங்கே வாகனங்களும் மழை நீரில் சிக்கி பழுதடைந்து விடுகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றுள்ளனர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் மழை நீர் ஓடும் வழி தடங்களை சுத்தம் செய்திட வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்