ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரருக்கு (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது. இன்னிலையில் 30 வருடம் கடந்த நிலையில் தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் VAO செல்வகுமாரை (43/25) 8 நாள்களுக்கு munbu சந்தித்து விவரம் கேட்டபோது D நமுனா பட்டாவில் உள்ள விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க ரூ.5000 தனக்கு வழங்க வேண்டும் என கரராக கேட்டுள்ளார்.
இந்நிலையில் புகார்தாரர் இன்று காலை VAO செல்வகுமாரை மீண்டும் தொடர்பு கொண்டு D நமுனா பட்டா அடங்கிய சான்றிதழ் வழங்க கேட்டபோது தான் கேட்ட ரூ. 5000/-ஐ கொடுத்துவிட்டு வாங்கிக்கீங்க என கூறியுள்ளார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.5000/-ஐ VAO செல்வகுமாரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்