கோவை ஜன, 7
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட அனைத்து வரி உயர்வுகளையும் குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகரில் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.