கோவை மார்ச், 19
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான்கு லட்சம் பேர் பாதிப்படைவதுடன் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யும் பாதிப்பும் சுமார் 30 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.