தருமபுரி மார்ச், 18
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுத் தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.