கோயம்புத்தூர் ஜன, 5
பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பும், மண் பானையில் செய்யப்படும் பொங்கலும்தான். நாகரீகம் வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சிலர் வீடுகளில் மண் பானைகளுக்கு பதிலாக எவர் சில்வர் பாத்திரத்தில் பொங்கல் வைக்கின்றனர்.
இருப்பினும் பலர் பாரம்பரியத்தை காக்கும் வகையில் இன்னும் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் சாதாரண பானைகள் முதல் வண்ண பானைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் இந்த பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.