கடலூர் ஜன, 9
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பணியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இருதய நோய், பல் மருத்துவம், தோல் நோய், கண் சிகிச்சை, நுரையீரல் பரிசோதனை, தொழுநோய், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.