கடலூர் செப், 17
மண்டபம் – கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணி அளவில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 8:30 மணிக்கு வந்தடைந்தது. மீண்டும் காலை 9.30 மணி அளவில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக கடலூர் ரயில் நிலையத்தை சென்றடைய உள்ளது.