கடலூர் ஜூன், 21
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னத்துரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன், விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடைமான நிலையில் உள்ளதால் கர்ணாபுரம் மக்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.