கீழக்கரை ஜூன், 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் S.M.பாக்கர்.இவர் தமுமுக,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்பாற்றியவர் பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை உருவாக்கி அதன் தேசிய தலைவராகவும் சிறந்த மேடை பேச்சாளராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார்.
S.M.பாக்கர் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.அவரின் உடல் இன்று மாலை சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
S.M.பாக்கர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தார்,இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் பாரதம் செய்திக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
ஜஹாங்கிர் ஆரூஸி
மாவட்ட நிருபர்