தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.