புதுடெல்லி ஜூன், 23
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத்குமார் சிங் இன்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.