திருப்பதி ஜன, 9
திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்புமின்றி இன்று முதல் விலை உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லட்டு பிரசாதம் ரூ.10 லிருந்து ரூ.25 ஆகவும், வடை ரூபாய் ரூ.6 லிருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தரிசன கட்டணம் ரூபாய் 100 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.