புதுடெல்லி ஜூலை, 28
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது கல்வி அமைச்சகம் வழங்கிய தரவுகளில் தெரியவந்துள்ளது. OBC பிரிவினருக்கான 80% இடங்களும், ஆதி திராவிடர்களுக்கான 64%, பழங்குடியினருக்கான 83% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மொத்தம் நிரப்பப்பட்ட 14,062 ஆசிரியர் பணியிடங்களில் 9,254 இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்பட்டுள்ளது.