ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.