தர்மபுரி ஜன, 9
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாறு அணையை ஒட்டி செல்லும் தொப்பூர்- பொம்மிடி சாலை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சாலையை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராஜதுரை, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ஆறுமுகம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் உடனிருந்தனர்.