ஜெய்ப்பூர் ஜன, 9
மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை காயத்ரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வங்கதேச இயக்குனர் அபர்னாசென் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது காயத்ரிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதிணை காயத்ரிக்கு அபர்ணா சென் வழங்கினார்.