Month: December 2022

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க பிரபலம்.

அமெரிக்கா டிச, 7 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது.

புதுடெல்லி டிச, 7 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இதில் தாக்கல் செய்யப்படவுள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் தாக்கல்…

டெல்லி தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை.

புது டெல்லி டிச, 7 டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த நான்காம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்த்து 50% வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு ஆளும் ஆம் ஆத்மி,…

பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

சென்னை டிச, 7 அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முதலில் மாவட்டத்திற்குள்ளும், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில்…

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் நடவடிக்கை.

டெல்லி டிச, 7 டெல்லியில் காற்றின் தர குறியீடு மோசமடைந்தது அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி அவசரகால சேவை தேர்தல் பணிகளுக்காக வாகனங்கள் தவிர்த்து இலகுரக பிஎஸ் 3 ரக பெட்ரோல்…

சுசீந்திரம் கோவில் திருவிழா ஆரம்பம்.

கன்னியாகுமரி டிச, 7 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் திருவிழா டிசம்பர் 28 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 27 ல் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் காலை மாலை சுவாமி அம்பாள்…

நன்கொடை வழங்கியவர்களில் முதலிடத்தில் அதானி.

அகமதாபாத் டிச, 7 ஆசியாவின் சிறந்த நன்கொடையாளர்களாக பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முதலிடத்தில் உள்ளார். எச்.சி.எல் நிறுவனர் சிவா நாடார் மற்றும் தொழிலதிபர் அசோக் சூடா ஆகியோர்…

வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 7 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் மண்டபம் திருப்புல்லாணி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்…

முசிறி காவல் துணை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருச்சி டிச, 7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் முகவரித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 2 ம்தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி வருகை.

தென்காசி டிச, 7 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக…