கன்னியாகுமரி டிச, 7
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் திருவிழா டிசம்பர் 28 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 27 ல் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலா காட்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 5 ல் நடைபெறுகிறது ஜனவரி 6ம் தேதி ஆருத்ரா தரிசனத்துடன் இத்திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.