கன்னியாகுமரி ஜூலை, 28
கடலுக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் திமுக அரசால் கடலரிப்பை தடுக்க முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி அருகே புத்தன்துறையில் 13 வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், மாவட்ட நிர்வாகமும் திமுக அரசும் சரியாக செயல்படாததே இதற்கு காரணமென்றும், ஆகையால் மக்களை அங்கிருந்து அகற்றுவதை தவிர்த்துவிட்டு அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.