புதுடெல்லி டிச, 7
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இதில் தாக்கல் செய்யப்படவுள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து நேற்று டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.