காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வீர மரணமடைந்த காவலர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த முதல்வர், இதனையடுத்து காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றையும் நட்டார். அதன் பின்னர், காவல்துறையில் கருணை அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.