அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்தால், பாஜகவை கழற்றிவிட்டு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறார் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.