NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க அதிமுக மட்டுமின்றி, டெல்லி மேலிடமும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியிலிருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் தவெகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வர் நாற்காலி தங்களுக்கே வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர், துணை முதல்வர், மத்திய வாரிய பதவிகள் உள்ளிட்டவைகளை வழங்க முன்வந்ததாம். ஆனாலும், அதை விஜய் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.