சென்னை டிச, 7
அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முதலில் மாவட்டத்திற்குள்ளும், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில் சேர்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.