கோவை டிச, 10
குரூப் 3 ஏ காலி பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு எழுத 38 மையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், ஊட்டி, திருச்சி, நெல்லை, வேலூர் மாவட்டங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.