சென்னை டிச, 10
10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு டிசம்பர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய டிசம்பர் 23 வரை தேர்வு துறை அவகாசம் அளித்துள்ளது. பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.