ராமநாதபுரம் டிச, 7
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் மண்டபம் திருப்புல்லாணி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் ஆப்தாப் ரசூல் உதவி ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோர் உள்ளனர்.