ராமநாதபுரம் டிச, 6
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் கமுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வைரவன் கோவில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.