கீழக்கரை ,டிச3
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சாலை தெருவில் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லீம் சங்கம் நிர்வாகத்தில் வக்பு வாரியத்திற்கு உட்பட்ட 18 வாலிபர்கள் தர்ஹா உள்புறத்தில் தொழுகை கூடம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா அனைத்து சமூதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமீது இப்ராஹிம் தலைமையில் 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை நிர்வாகிகள் க.கு ஜப்பார், சேகு ஜமாலுதீன் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது,
இவ்விழாவிற்கு S.J. காதர் சாஹிப் வரவேற்புரை வழங்கி, கீழக்கரை டவுன் காஜி, காதர் பக்ஸ் சித்தீக் இறைஇல்லம் கட்டுவதின் சிறப்பு பற்றி சிட்ருறை வழங்க, மன்சூர் ஆலிம் துஆ ஒத தொழுகைக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது,
இந்நிகழ்ச்சியினை 18 வாலிபர்கள்தர்ஹா பரிபாலன கமிட்டி உறுப்பினர்கள் P.R.L ஹாமிது இப்ராஹிம், சதக் இல்யாஸ், K.S சாகுல் ஹமீது, சீனி முஹம்மது, ராசிக் பரீத், ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்,
இவடிக்கல் நாட்டுவிழாவிற்கு கீழக்கரையில் உள்ள ஜமாத் பிரமுகர்கள் உள்பட நூற்றுகணக்கான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் பட்டை சோறு (உணவு) மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.