கீழக்கரை டிச, 1
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி கடந்த நவம்பர் 13 அன்று சமூக நல ஆர்வலர்களால் “நமது கே.எல்.கே(KLK) வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவங்கப்பட்டது.
இந்த கமிட்டியின் மூலம் கீழக்கரை மக்கள் நலன் கருதி உள்ளூர் இலவச வாகன சேவை, இலவச குடிநீர், இலவச உணவு, இலவச அரிசி வழங்குவது போன்ற திட்டங்களை நிறைவேற்றி தருமாறு கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான சீனா தானா(எ)செய்யது அப்துல் காதரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகம் முதல் கட்டமாக கடந்த மாதம் 14 ம் தேதி அன்று ஏழை,எளிய மக்களுக்கான இலவச உணவு,இலவச குடிநீர், இலவச வாகன சேவைகளை துவக்கி வைத்தனர்.
மேலும் இலவச அரிசி வழங்கும் வகையில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் 29 ம் தேதி அன்று மூவாயிரம் கிலோ அரிசியை கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் சித்தீக் பொருளாளர் சாகுல்ஹமீது ஆலிமிடம் ஒப்படைத்தனர்.
அரிசியை பெற்றுக்கொண்ட கமிட்டியினர் கண்ணாடி வாப்பா அறக்கட்டளைக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு மேலும் கீழக்கரை ஏழை எளிய மக்களின் கல்வி,மருத்துவம்,மகளிர் சுய உதவிக்குழுவிற்கான திட்டங்களையும் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
மேலும் நமது கே.எல்.கே.வெல்ஃபேர் கமிட்டியின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வதாக கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டி சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினர்களான ஹாஜா முகைதீன், சபீக், லாஹிதுகான், ஹமீது, செய்தி தொடர்பாளர் ஜஹாங்கீர் அரூஸி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்.
கீழக்கரை.