ராமநாதபுரம் டிச, 1
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.