ராமநாதபுரம் நவ, 29
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வன்கொடுப்பை தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ஐந்து பேர்களின் குடும்பத்தாரின் வாரிசுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
மேலும் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் கருணை அடிப்படையில் சமையலராக பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.