அகமதாபாத் டிச, 7
ஆசியாவின் சிறந்த நன்கொடையாளர்களாக பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முதலிடத்தில் உள்ளார். எச்.சி.எல் நிறுவனர் சிவா நாடார் மற்றும் தொழிலதிபர் அசோக் சூடா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் அதானி கல்வி மருத்துவம் மற்றும் திறன் பயிற்சிக்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.