Category: மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம். குழந்தைகளுடன் அமர்ந்து உணவு ஊட்டிவிட்ட முதல்வர்.

மதுரை செப், 15 மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் தனது உரையில், அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், மூர்த்தி, கணேசன், பழனிவேல் தியாகராஜன்,…

பழங்குடியினர் பட்டியலில நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டரை சேர்க்க ஒப்புதல்

புதுடெல்லி செப், 14 தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசத்திலும் வேறு சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும்…

புதுச்சோியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரி செப், 13 தமிழகத்தில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு…

ஆக்கிரமிப்புகள் அகற்றம். கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு.

பெங்களூர் செப், 13 பெங்களூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள ஏரி, கால்வாய் உள்பட நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பசவராஜ்…

கேரள அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

இடுக்கி செப், 12 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில்,…

விராட் கோலி என்னை விட திறமையானவர். கங்குலி புகழாரம்.

புதுடெல்லி செப், 11 விராட் கோலி என்னை விட திறமையானவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இருவரின் ஆட்ட ஒப்பீடு குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பட்டது இது குறித்து அவர் கூறியதாவது, ஒப்பிடுதல் ஒரு வீரராக திறமையின் அடிப்படையில் இருக்க…

ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் தசரா விழா ஏற்பாடுகள்.

பெங்களூரு செப், 11 கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26ம் தேதி தொடங்கி அக்டோபர்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி.

திருப்பதி செப், 10 ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி வந்தார். இதையடுத்து திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.…

நேதாஜி சிலை அருகே பிரமாண்ட டிரோன் கண்காட்சி.

புதுடெல்லி செப், 10 நேதாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் டிரோன்கள் பறந்து ஒளிர செய்தன. நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது. டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோசின்…

10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை.

புதுடெல்லி செப், 10 இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான…