புதுடெல்லி செப், 10
இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.
மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.