Category: மாநில செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி‌ செப், 19 புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர்.…

ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்.

ஜெய்ப்பூர் செப், 19 ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். மேலும் ராகுல் காந்தியை கட்சியின்…

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து.

மாகாராஷ்ட்ரா செப், 18 மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், வெள்ளிக் கிழமையன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமத்தை `பொதுச் சுகாதார நலன் கருதி’ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – துணை ஜனாதிபதி சந்திப்பு.

புதுடெல்லி செப், 18 காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். அவரை நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சந்தித்தார். மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த…

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதலமைச்சர் பொம்மை உறுதி.

பெங்களூரு செப், 17 கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12 ம்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் அமைச்சராக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை…

பிரதமர் மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து.

புதுடெல்லி செப்,17 இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

கேரளாவில் தொடரும் ராகுல் காந்தியின் நடைபயணம்.

திருவனந்தபுரம் செப், 16 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம்…

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் கண்டெடுப்பு.

திருவண்ணாமலை செப், 15 ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் விளைசித்தேரி கிராமத்தின் சாலையோரம் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பம் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் என்பது உறுதியானது. அத்துடன் கோவிலுக்கு அருகிலேயே விஷ்ணு அல்லது சிவன்…

தெலுங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர்

ஐதராபாத் செப், 15 தெலங்கானா அரசின் தலைமை செயலகம் 132 ஆண்டுகளாக சைபாபாத் நிஜாம் நவாப்களின் அரண்மனையாக இருந்து வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 16 முதல்வர்கள் ஆட்சி செய்தனர். தனி தெலங்கானாவாக உருவான பிறகு 2வது முறையாக சந்திரசேகரராவ் முதல்வராக…

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டிகள். துணை மேயர் தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 15 முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. 13 வயது, 15 வயது, 17 வயது என…