புதுடெல்லி செப்,17
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி நீண்ட நாட்கள் வாழ்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்கள்.
இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி மேற்கொள்ளும ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் சர்வதேச அளவில் இந்தியா உயர்ந்த நிலையில் இருப்பதாக புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்