பெங்களூரு செப், 17
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12 ம்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் அமைச்சராக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது.
இக்கூட்டத்தில், ‘கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை தாலுகாவில் தொழிற்சாலை அமைக்க பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு 1,870 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோலார் மாவட்ட கலெக்டர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம்தேதி அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 971 ஏக்கர் நிலத்தை திரும்ப எடுத்து கொள்ளும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியளித்தார்