மாகாராஷ்ட்ரா செப், 18
மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், வெள்ளிக் கிழமையன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமத்தை `பொதுச் சுகாதார நலன் கருதி’ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், “கொல்கத்தாவை சேர்ந்த மத்திய மருந்து ஆய்வகத்தின் அறிக்கையின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புனே மற்றும் நாசிக்கில் இருந்து தரப் பரிசோதனைக்காக ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன.
அந்தச் சோதனையில் பேபி பவுடரின் Ph மதிப்பு தரமானதாக இல்லை. ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் பச்சிளம் குழந்தைகளின் சருமத்தை பாதிக்கலாம் என கருதப்பட்டது. எனவே ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமம் `பொதுச்சுகாதார நலன்’ கருதி ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது